கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகக் கிரிக்கெட் பார்க்கிறேன் நான்! 1995 ஆம் ஆண்டு தொற்றிக்கொண்ட பழக்கம் அது! ஐந்தாம் வகுப்பிலிருந்தே பேட் மற்றும் பந்து மீது தீராத காதல்! அந்தக் காதலை நிறைவேற்றும் விதமாக அற்புதமான கிரிக்கெட் நண்பர்கள் எனக்கு அமைந்தார்கள்! அதில் எல்லோருமே எனக்கு சீனியர்கள்! சிறுவனான எனக்கு அவர்கள் கொடுத்த ஊக்கமும் அன்பும் உற்சாகமும், ‘Under 13‘ பிரிவில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்குத் தேர்வு செய்யும் அளவுக்கு எடுத்துச் சென்றது. கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பில் ஒரு விக்கெட் மட்டும் எடுத்து ...