யாருடைய காதலுக்கு இந்த வசனம் பொருந்துகிறதோ இல்லையோ… இந்த ஆந்தைக் காதலர்களுக்குப் பொருந்தும்! ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது… புனிதமானது…’ உண்மையில் இரவாடிகளின் காதல் புனிதமானது தான்! மஞ்சுமல் பாய்ஸின் சுரம் அடித்துக் கொண்டிருக்கும் சூழலில், கிட்டத்தட்ட பதினொரு வருடங்களுக்குப் பிறகுப் பழைய கல்லூரி நண்பர்களுடன், மஞ்சுமல் பாய்ஸ் உற்சாகத்தில் நற்பயணமாக வேடந்தாங்கலில் குதூகலித்துக் கொண்டிருந்தோம்! கரையோரம் இருந்த மரக் கிளையில் லேசான அசைவுத் தோன்ற சட்டெனத் தலையைத் திருப்பினேன்! புள்ளி ஆந்தைகள் இரண்டு! ‘இரண்டும் ஒன்றோடு ...