விஞ்ஞான வளர்ச்சியை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் முழுவதுமாக அதை மட்டுமே சார்ந்து இருப்பது மிகப்பெரிய தவறு. அதை முறையாக பயன்படுத்த தெரியாமல் இருப்பதும் தவறு தான். குறிப்பாக குளிர்ப்பதனப் பெட்டியை நாம் முறையாக தேவைக்கேற்ப பயன்படுத்துகிறோமா? ’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்பது நோய் அணுகாமல் இருப்பதற்காக எழுதப்பட்ட சித்தர் பாடல். ஆனால் இன்றைய காலத்தில், முந்தைய நாள் சமைத்த உணவுகள், நாட்கள் பல கடந்தும் குளிர்ப்பதனப் பெட்டியின் உதவியுடன், நமக்கு அமுதமாக தெரிகின்றன. உண்மை ...