‘Life starts at 40…’ என்று ஓர் உற்சாகப் பதம் இருக்கிறது! இன்றைய பிறந்தநாள் சரியாக முப்பத்து எட்டு வருடங்கள் உருண்டாடிவிட்டதை நினைவுப்படுத்துகிறது. மேற்சொன்ன வாசகத்தின் படி லைஃப் தொடங்குவதற்குக் கூட இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்ற கூடுதல் உற்சாகத்தோடு இந்தப் பிறந்த நாளையும் தொடங்குகிறேன்! இளமையின் துடிதுடிப்பும் தனி மனிதருக்குள் இருக்கும் குழந்தைமையும் குறைய வாய்ப்பிருக்கும் தருவாயில், அவற்றை இழந்துவிடாமல் நாற்பதுகளுக்குள் நுழைபவர்களுக்குக் குதூகலத்தைத் தரும் வாசகம் அது! அடுத்தக் கடத்திற்கு நகர்வதற்கான ஊக்கச் சொற்றொடர் அது! பலருக்கும் தெரியாமல் வெகு ...