கங்குவா: குறிஞ்சித் திணையைக் 3D காட்சி அமைப்புடன் இருந்த இடத்திலிருந்தே மெய்மறந்து ரசித்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்! அப்படியான உணர்வைக் கொடுத்திருக்கிறது கங்குவா! குறிஞ்சித் தேன் சுவையை, நாமொட்டுகளில் அல்லாமல் கண்களுக்குள் காட்சிச் சுவையைப் படரவிட்டிருக்கிறது கங்குவா! காடுகளையும் காடுகள் சார்ந்த இடங்களையும் திரையில் ரசிக்க விரும்புபவர்களுக்குக் கங்குவா ஒரு விருந்து தான்! சில திரைப்படங்களை Theatrical experienceகாகவே திரையரங்குகளில் பார்ப்பது கட்டாயம். ‘லப்பர் பந்து’ போன்ற திரைப்படங்களை ரசிகர்களின் ஆரவாரத்துடன் பார்த்து ரசிப்பது ஒரு வகை! கங்குவா போன்ற திரைப்படங்கள் காட்சி அமைப்பிறக்கவும், ...