ஏராளமான செயற்கை முகப்பூச்சுக்கள் வணிகச் சந்தையில் கவலையின்றி நடைப்போடுகின்றன. அனுமதிக்கப்படாத இரசாயனக் கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளதைப் பற்றியோ, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் வேதியல் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதைப் பற்றியோ விற்பனர்களுக்கு கவலை கிடையாது. இதில் விஷயம் என்னவென்றால் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் அதனால் உண்டாகும் ஆபத்துக்களைப் பற்றி கவலையும் விழிப்புணர்வும் இருப்பதில்லை. இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டே பல்வேறு லாப நோக்கம் கொண்ட அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உற்சாகமாய் அறமில்லா வணிகத்தை செய்து வருகின்றன. எச்சரிக்கும் ஆய்வுகள்: ’வருடக்கணக்கில் செயற்கை முகப்பூச்சு கலவைகளைப் பயன்படுத்தும் போது, தோல் ...