முகத்தில் பூசப்படும் செயற்கை கிரீம்களால் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு, வெகுஜனங்களிடையே ஓரளவு ஏற்படத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயம். அதுதவிர்த்து அதிகளவில் பயன்படுத்தப்படும் உதட்டுச் சாயங்களின் (லிப்ஸ்டிக்) உண்மை நிலவரத்தைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை பேசப்போகிறது. செயற்கையாக உதடுகளுக்கு வண்ணம் தீட்டி அழகு பார்க்கும் நாம், அவ்வண்ணங்களில் ஒளிந்திருக்கும் பாதகங்களைப் பற்றி எண்ணிப்பார்ப்பதில்லை.  இயற்கையான உதட்டுச்சாயங்கள்: உதட்டுச்சாயம் பூசுவதென்பது சமீபத்தில் உருவெடுத்த பழக்கம் அல்ல. பழங்கால எகிப்தில், சமூக அந்தஸ்தைக் உயர்த்திக் காட்ட இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உதட்டுச் சாயம் பூசும் வழக்கம் ...