யாருடைய காதலுக்கு இந்த வசனம் பொருந்துகிறதோ இல்லையோ… இந்த ஆந்தைக் காதலர்களுக்குப் பொருந்தும்! ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது… புனிதமானது…’ உண்மையில் இரவாடிகளின் காதல் புனிதமானது தான்! மஞ்சுமல் பாய்ஸின் சுரம் அடித்துக் கொண்டிருக்கும் சூழலில், கிட்டத்தட்ட பதினொரு வருடங்களுக்குப் பிறகுப் பழைய கல்லூரி நண்பர்களுடன், மஞ்சுமல் பாய்ஸ் உற்சாகத்தில் நற்பயணமாக வேடந்தாங்கலில் குதூகலித்துக் கொண்டிருந்தோம்! கரையோரம் இருந்த மரக் கிளையில் லேசான அசைவுத் தோன்ற சட்டெனத் தலையைத் திருப்பினேன்! புள்ளி ஆந்தைகள் இரண்டு! ‘இரண்டும் ஒன்றோடு ...

48 மணி நேரங்களைத் தாங்கிய இரண்டு நாட்களும் இடைவிடாமல் பறவைகள்… விலங்குகள்… சுற்றுச்சூழல் குறித்துப் பேசிக்கொண்டே இருந்தால் இயந்திர வாழ்க்கை குறித்த நினைவு வர வாய்ப்பிருக்கிறதா! நிச்சயம் இல்லை… அப்படி ஒரு அழகான சூழலைத் தான் சவ்வாது மலை பறவையாளர்கள் சந்திப்பு ஏற்படுத்தியிருந்தது. அதாவது பறவைகள் குறித்த தேடல் இடைவிடாமல் இருந்துக்கொண்டே இருந்தது. வெளியே பறவைகளின் குரல்கள் எதிரொலிக்க, உள்ளே பறவைகள் குறித்த உரையாடல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. வெளியே பறவைகளின் குரல்… உள்ளே பறவை ஆர்வலர்களின் குரல்!… அவ்வளவே வித்தியாசம்! கோடை காலத்திற்கேற்ற ...

  சிட்டுக்குருவிகளை அதிகமாக பார்த்து, அவற்றோடு புழங்கிய மனிதர்களுக்கு அழகான நினைவுகளை “சிட்டு” புத்தகம் கொடுக்கும். சிட்டுக்களின் அழகான உலகத்தை ரசிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கும். யாரைக்கேட்டாலும் சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு காரணம் செல்போன் கோபுரங்கள் மட்டுமே என்று கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை விளக்குவதோடு, அதற்கான காரணத்தையும் தெளிவாக ஆசிரியர் ஆதிவள்ளியப்பன் அவர்கள் தெளிவுப்படுத்துகிறார். சிட்டுக்களின் உணவு… அதன் இனப்பெருக்க களியாட்டம்… ஆண் பெண் பாலினப் பாகுபாடு… அதன் கூடு… மனிதர்களோடு தொடர்பு… இப்படி சிட்டுக்குருவிகளின் வாழ்வியலையும் உணவியலையும் தெரிந்து ...

சித்திரை மாதம். காய்களாய் உருமாற காத்திருந்த வேப்பம் பூக்களை ஒரு மரத்தின் கீழிருந்து ரசித்துக்கொண்டிருந்தேன். நீண்டிருந்த பட்டை வாலை சுமந்துக்கொண்டு திடீரென வேதிவால் குருவி ஒன்று வேப்ப மரக்கிளையில் வந்தமர்ந்தது. ஏற்கனவே பலமுறை தூரத்தில் ரசித்திருந்தாலும், இப்போது மிக அருகில்! அது அழகு நிறைந்த வேதிவால் குருவி. ஆங்கிலத்தில் Paradise flycatcher. வெள்ளை நிறத்திலிருந்த அது ஆண் குருவி. பறவை இனத்தில் பொதுவாக ஆண்களுக்கே அழகான இறக்கைத் தொகுதிகள் இருக்கும். பெண் பறவைகளைக் கவர்ந்தாக வேண்டுமே! படம் எடுக்க கைகள் பரபரத்தன. கேமராவை எடுத்து ...