வெளிநாட்டு சூழலை எழுத்துக்களின் மூலம் அறிந்துக்கொள்ளும் ஆவலில், கோடை மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த மாலை வேளை ஒன்றில், சமஸ் அவர்களின் லண்டனைப் படிக்கத் தொடங்கி இருந்தேன்! லண்டனைப் பற்றிப் படிக்கும் போது, ஓரளவிற்காவது இதமான சூழல் இருக்க வேண்டுமல்லவா!… விமான அனுபவத்தில் தொடங்குகிறது… பிரித்தானிய கிராம அனுபவத்தில் முடிகிறது… இடையில் குளிர்ச்சியான ஓர் வெளிநாட்டுப் பயணத்தை சலிப்புத் தட்டாத எழுத்தின் மூலம் தரக்காத்திருக்கிறது லண்டன்!… பல்வேறு பயணக் கட்டுரைகளையும், பயணத் தொகுப்புகளையும் இதற்கு முன்பு நிறைய வாசித்த அனுபவம் உண்டு! அந்த அனுபவங்களிலிருந்து எவ்வகையில் ...