புதுமனைப் புகு விழாவிற்கு அன்போடு அழைக்கிறோம்! அறுபத்து ஆறு வயதில் தந்தைக்கு முதல் காதல் துளிர்விட இருக்கிறது! அறுபத்து மூன்று வயதில் தாய்க்கு முதல் காதல் மகிழ்ச்சியூட்ட இருக்கிறது… எனக்கோ முப்பத்து ஏழு வயதில் முதற்காதல் மொட்டவிழப் போகிறது… ஆம், இவ்வயதுகளில் முதன் முறையாகச் செங்கற்கள் மீது காதல் கொண்டு சொந்த வீட்டில் குடியேற இருக்கிறோம்! பெற்றோரும், மனைவியும், நானும், இரண்டு குட்டித் தேவதைகளும் பல கனவுகளைச் சுமந்துகொண்டு உற்சாகத்தோடு நுழையக் காத்திருக்கிறோம். முப்பத்து ஏழு ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே குடியிருந்திருந்தாலும், சொந்த வீட்டில் ...
இதுவரை நான் வாழ்ந்த அனைத்து வாடகை வீடுகளுக்கும் கடந்த வாரம் சென்றுவிட்டு தான் வந்தேன்! அதற்கான காரணமும் இருக்கிறது. பிறந்த சில மாதங்களிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை வாழ்ந்த சேலம் அரிசிப்பாளையம் பகுதி வாடகை வீடு என்றுமே ஸ்பெஷல்! புகைப்படத்தில் இருக்கும் பகுதியில் தான் எனது பெரும்பாலான குழந்தைப் பருவம் கழிந்தது! 90’ஸ் கிட்ஸ்: 90’ஸ் கிட்ஸ்களின் ஸ்பெஷலான ஐஸ் வண்டிகள்… சிறுவர் குழு விளையாட்டுகள்… நிலாச் சோறு… மாடியின் அடைப்பை அடைத்து மழை நீரைத் தேங்கவிட்டு நீரில் விளையாடுவது… தெருமுனையில் வெண் திரையில் ...
சங்க காலத் திருவிழா போன்ற பிரமையை ஏற்படுத்திய திருப்பத்தூர் விதைகள் மற்றும் உணவுத் திருவிழா: படையப்பா திரைப்படத்தில் இறுதிப் பகுதியில் ஒரு காட்சி இடம்பெறும்… கேமிராவை மேல் ஆங்கிலில் வைத்துக் காட்டும் போது பல நூறு மீட்டர் தூரத்துக்குக் கூட்டம் வரிசைக் கட்டி நிற்கும். அப்படியான சூழல் தான் உணவுத் திருவிழாவில்! மதிய உணவாக வழங்கப்பட்ட பத்து வகையான பாரம்பர்ய உணவுகளைச் சாப்பிடுவதற்காக பெருங்கூட்டம்! ஆரோக்கியத்திற்கான தேடல் மிகப் பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு அது! நூற்று மூன்று வயது விவசாயி நிகழ்வைத் ...
’ஷேன் வார்னே’ எனும் மாயாஜாலம்: (1969 – 2022) 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சச்சின் ரன் வேட்டை நடத்திய போது, வார்னே பந்துகளையும் சேர்த்து சிதறடித்துக்கொண்டிருந்தார். ’வார்னே பந்துகளை சமாளிசிட்டா போதும், ஜெயிச்சிடலாம்…’ என்று அருகிலிருந்தவர்கள் சொன்ன நினைவு! யார் இந்த வார்னே… என தொடங்கிய கேள்வி அவரது வளர்ச்சியையும் மாயாஜாலத்தையும் கூர்மையாக கவனிக்க வைத்தது. இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங்கிற்கு (Mike gatting) வார்னே வீசிய சூப்பர் சுழல் பந்து, லெக் ஸ்டம்பில் விழுந்து, ...
About the Author
Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)