வெளிநாட்டு சூழலை எழுத்துக்களின் மூலம் அறிந்துக்கொள்ளும் ஆவலில், கோடை மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த மாலை வேளை ஒன்றில், சமஸ் அவர்களின் லண்டனைப் படிக்கத் தொடங்கி இருந்தேன்! லண்டனைப் பற்றிப் படிக்கும் போது, ஓரளவிற்காவது இதமான சூழல் இருக்க வேண்டுமல்லவா!… விமான அனுபவத்தில் தொடங்குகிறது… பிரித்தானிய கிராம அனுபவத்தில் முடிகிறது… இடையில் குளிர்ச்சியான ஓர் வெளிநாட்டுப் பயணத்தை சலிப்புத் தட்டாத எழுத்தின் மூலம் தரக்காத்திருக்கிறது லண்டன்!… பல்வேறு பயணக் கட்டுரைகளையும், பயணத் தொகுப்புகளையும் இதற்கு முன்பு நிறைய வாசித்த அனுபவம் உண்டு! அந்த அனுபவங்களிலிருந்து எவ்வகையில் ...

48 மணி நேரங்களைத் தாங்கிய இரண்டு நாட்களும் இடைவிடாமல் பறவைகள்… விலங்குகள்… சுற்றுச்சூழல் குறித்துப் பேசிக்கொண்டே இருந்தால் இயந்திர வாழ்க்கை குறித்த நினைவு வர வாய்ப்பிருக்கிறதா! நிச்சயம் இல்லை… அப்படி ஒரு அழகான சூழலைத் தான் சவ்வாது மலை பறவையாளர்கள் சந்திப்பு ஏற்படுத்தியிருந்தது. அதாவது பறவைகள் குறித்த தேடல் இடைவிடாமல் இருந்துக்கொண்டே இருந்தது. வெளியே பறவைகளின் குரல்கள் எதிரொலிக்க, உள்ளே பறவைகள் குறித்த உரையாடல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. வெளியே பறவைகளின் குரல்… உள்ளே பறவை ஆர்வலர்களின் குரல்!… அவ்வளவே வித்தியாசம்! கோடை காலத்திற்கேற்ற ...

முன்பின் அறிமுகமில்லாத மருத்துவர்கள், பொறியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், இளம் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் என 25 பேர் கொண்ட குழுவாகிய நாங்கள் மலையேற்றத்தின் மூலம் சேர நாட்டு மலைப் பகுதியான ‘டாப்-ஸ்டேஷனை’ (மூணார் அருகில்) அடைய போடிநாயக்கனூரில் (தேனி மாவட்டம்) ஒன்று கூடினோம். அங்கிருந்து வாகனங்கள் மூலம் பேஸ்-கேம்ப் (Base camp) பகுதியான குரங்கனி மலைப் பகுதிக்கு பயணமானோம். காலை 9 மணிக்கு தொடங்கிய எங்கள் மலையேற்றம் மாலை 4 மணி அளவில் டாப்-ஸ்டேஷனில் முடிவடைந்தது. 9 மணி முதல் ...

துபாய் என்றவுடனே சட்டென்று நினைவுக்கு வருவது வானுயுர்ந்த கட்டிடங்களும் நிசப்தமான பாலைவனமும் தான். சித்த மருத்துவ கருத்தரங்கிற்காக துபாய் சென்றிருந்த மருத்துவர் குழுவாகிய நாங்கள், ஓய்வு நேரத்தில் அங்கிருக்கும் பாலைவனத்தை ரசிக்க முடிவு செய்தோம். பாலைவனப் பயணம் (Desert safari) மேற்கொள்ள நிறைய வாகன வசதிகள் அங்கு இருக்கின்றன. துபாய் நேரப்படி மாலை மூன்று மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. துபாயிலிருந்து ஒருமணி நேரப் பயணம் மூலமாக பாலைவனத்தின் மையப்பகுதியை அடைந்தோம். பரந்துவிரிந்திருந்த பாலைவனத்தை சிறிது நேரம் மெய்மறந்து ரசித்தோம். மிகப்பெரிய மணற் கடல்: ...

பறவைகள் மற்றும் காடுகள் மீது ஆர்வமுடைய நாற்பது பேர் கொண்ட குழுவாகிய நாங்கள் சனிக்கிழமை காலை ஏழு மணி அளவில் கேரள மாநிலம் தட்டக்காடு சலீம் அலி பறவைகள் சரணாலயத்திற்கு முன் ஒன்று கூடினோம். பசுமை மாறாக் காடுகள் கண்களுக்கு இதமளித்தன. தென்மேற்கு பருவமழை வாஞ்சையோடு பூமியைத் தழுவிக்கொண்டிருந்தது. ஆரம்பமே அமர்க்களமாக உயர்ந்திருந்த பலாமரக் கூட்டங்களின் உச்சிகளில் இருவாச்சி பறவைகள் (Malabar Grey Hornbill) வந்தமர்ந்து காட்சியளித்தன. நீளவால் கரிச்சான் (Rocket tailed Drongo) விருட்டென்று அங்கிருந்த ஓடையின் மீது பறந்து எங்களை தலை ...