கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது. குறுந்தொகையில்… “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து ...

விஞ்ஞான வளர்ச்சியை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் முழுவதுமாக அதை மட்டுமே சார்ந்து இருப்பது மிகப்பெரிய தவறு. அதை முறையாக பயன்படுத்த தெரியாமல் இருப்பதும் தவறு தான். குறிப்பாக குளிர்ப்பதனப் பெட்டியை நாம் முறையாக தேவைக்கேற்ப பயன்படுத்துகிறோமா? ’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்பது நோய் அணுகாமல் இருப்பதற்காக எழுதப்பட்ட சித்தர் பாடல். ஆனால் இன்றைய காலத்தில், முந்தைய நாள் சமைத்த உணவுகள், நாட்கள் பல கடந்தும் குளிர்ப்பதனப் பெட்டியின் உதவியுடன், நமக்கு அமுதமாக தெரிகின்றன. உண்மை ...

தென் இந்தியாவை மட்டும் எடுத்துக்கொள்வோம். எத்தனை வகை பரோட்டாக்கள்! மைதாவின் ஆதாரத்தால் பிறந்த பரோட்டாக்களின் பரம்பரை வழிவந்த மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்து பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா என பல. அப்படியே கொஞ்சம் தெற்கு பக்கமாக இந்திய வரைப்படத்தில் சரிந்தால், இலங்கை பரோட்டா என மற்றொரு வகை. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் வலம் வருகின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்து வகைகளும் ஒரே ...

’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவாகவே பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் உண்மையில் கஞ்சி என்பது பத்திய உணவாக மட்டுமில்லாமல் உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நமது மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.  பட்டினப்பாலை கூறும் கஞ்சி: ‘சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுப் போலப் பரந்தொழுகி’ என்கிற பட்டினப்பாலை வரிகள், சோறு வடித்த கஞ்சியானது ஆறு போல ஓடியதாக கவிதைப் பேசுகிறது. நமது உணவுக் ...