மலைப் பகுதிகளுக்குச் சுற்றுலா பயணமாகச் சென்றாலும் சரி, மருத்துவப் பயணமாகச் சென்றாலும் சரி, மலைகள் புத்துணர்வூட்டும் புதிய அனுபவங்களை நமக்காக கொடுத்துக்கொண்டே இருக்கும். அவ்வகையில் ஏலகிரி மலைவாழ் மக்களுக்கான நடமாடும் சித்த மருத்துவப் பிரிவு சார்பாக நடைபெற்ற முகாமில் உற்சாகமூட்டும் அனுபவம் கிடைத்தது. நேபாளத்து முடியவர்: அவரைப் பார்க்கும் போதே நேபாளத்தைச் சார்ந்தவர் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. அவர் அருகில் வரும் போதே ‘தமிழ்…’ என்று நான் இழுக்க… ‘நல்லா தமிழ் தெரியும் சார்… எனக்கான பிரச்சனைய நானே சொல்றேன்…’ என அழகுத் தமிழில் ...