செரிமான உறுப்புகளோடும், சுரப்புகளோடும் நட்புப் பாராட்டி, செரிமானத் தொந்தரவுகள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளும் அற்புத மருந்து இஞ்சி. ஆத்திரகம், அல்லம், ஆர்த்தரகம், இலாக்கொட்டை, நறுமருப்பு, மதில் போன்றவை இஞ்சிக்கு இருக்கும் வேறுபெயர்கள். ’காலை இஞ்சி… கடும்பகல் சுக்கு… மாலை கடுக்காய்…’ எளிமையான சூத்திரம் தான்! இப்படி காலம் அறிந்து தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டுவர உடல் திடம்பெறும். நோய்கள் வராமல் பாதுகாக்க சித்தர்கள் வகுத்த சிறந்த கற்ப முறை இது. இஞ்சியை தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொஞ்சம் உலரச் செய்து, தேனில் ...
பிரத்யேகமான நெடியும், மற்ற நறுமணமூட்டிகளிலிருந்து மாறுபட்ட சுவையும் கொண்டது மஞ்சள். நிறத்தையும் குணத்தையும் அடிப்படையாகக் கொண்டு, ’ஏழைகளின் குங்குமப்பூ’ என்று முற்காலத்தில் மஞ்சள் அழைக்கப்பட்டிருக்கிறது. ’நறுமணமூட்டிகளுள் தங்கம்’ என பெயர் சூட்டும் அளவிற்கு மஞ்சளின் மகத்துவம் அதிகம். ’காய்க்கமுகின் கமழ் மஞ்சள்…’ எனும் பட்டினப்பாலை வரிகள், சோழ நாட்டில் மஞ்சளின் விளச்சலைப் பற்றி பெருமை பேசுகிறது. திருவிழாக்கள்… சடங்குகள்… அழகியல்… மருத்துவம்… சமையல்… என நமது உணர்வோடும் உணவோடும் நெருக்கமான உறவு கொண்டிருக்கும் மஞ்சள், நோய்களைத் தடுக்கும் மிகச்சிறந்த ’இயற்கை காவலன்’. ஜப்பான் மற்றும் ...
நறுமணப் பொருட்களின் ராஜ்ஜியத்தில், ராஜாவாக மிளகு வீறுநடைப் போடுவதைப்போல, ராணியாக வலம் வருவது மணம் மிக்க ஏலம் (Queen of Spices). பதினைந்தாம் நூற்றாண்டில், அனைத்து நறுமணமூட்டிகளின் விலையும் உச்சத்திலிருந்தது. அப்போது மற்ற நறுமணமூட்டிகளைப் பின்னுக்குத் தள்ளி, அதிக விலைக்கு விற்கப்பட்டு, உச்ச நட்சத்திரமாக மின்னியது ’நறுமண ராணி’ ஏலம் தான். வரைமுறையின்றி விளைந்துக் கிடக்கும் ஏலத்திற்காக, பல்வேறு நாட்டு வணிகர்கள், ’ஏல மலையைத்’ (நமது மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி) தேடி அலைந்த வரலாறு உண்டு. ஏலத்தின் மீது மிகுந்த மோகம் கொண்ட ...
About the Author
Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)