’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவாகவே பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் உண்மையில் கஞ்சி என்பது பத்திய உணவாக மட்டுமில்லாமல் உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நமது மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.  பட்டினப்பாலை கூறும் கஞ்சி: ‘சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுப் போலப் பரந்தொழுகி’ என்கிற பட்டினப்பாலை வரிகள், சோறு வடித்த கஞ்சியானது ஆறு போல ஓடியதாக கவிதைப் பேசுகிறது. நமது உணவுக் ...