சிறு உழவன் பா.பவண் எனும் குட்டி விவசாயி: அழகாய்ப் படித்த தலைமுடி! நெற்றியில் இரசாயனமில்லா வேங்கைப் பொட்டு! தோளில் பச்சைத் துண்டு, பச்சை மனம்… இது படத்தில் உள்ள குட்டி விவசாயிக்கான அடையாளம்! மூன்றாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவனின் பெயர் என்ன தெரியுமா! ‘சிறு உழவன் பா.பவண்’… பெயரைக் கேட்பதற்கே ஏதோ விவசாயக் கவிதையை வாசிப்பதைப் போல இருக்கிறதல்லவா! திருப்பத்தூர் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் தருமபுரி மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள இருநூற்றுப் பதினைந்து பாரம்பரிய நெல் ரகங்களைப் பிசிறு தட்டாமல் ஒப்புவிப்பதற்காக மேடை ...

சங்க காலத் திருவிழா போன்ற பிரமையை ஏற்படுத்திய திருப்பத்தூர் விதைகள் மற்றும் உணவுத் திருவிழா: படையப்பா திரைப்படத்தில் இறுதிப் பகுதியில் ஒரு காட்சி இடம்பெறும்… கேமிராவை மேல் ஆங்கிலில் வைத்துக் காட்டும் போது பல நூறு மீட்டர் தூரத்துக்குக் கூட்டம் வரிசைக் கட்டி நிற்கும். அப்படியான சூழல் தான் உணவுத் திருவிழாவில்! மதிய உணவாக வழங்கப்பட்ட பத்து வகையான பாரம்பர்ய உணவுகளைச் சாப்பிடுவதற்காக பெருங்கூட்டம்! ஆரோக்கியத்திற்கான தேடல் மிகப் பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு அது! நூற்று மூன்று வயது விவசாயி நிகழ்வைத் ...

மீசைக்கார தமிழ் அன்பர் மகுடேசுவரன் அவர்கள்: யார் இந்த மீசைக்காரர்! மீசைக் கார பாரதியா! ஆம், நவீன பாரதி என்றே இவரை அழைக்கலாம். மீசைக்கார பாரதிக்கு எப்படி அறிமுகம் தேவை இல்லையோ, அப்படி இந்த மீசைக்கார தமிழ் ஆர்வலர் திரு.மகுடேசுவரன் அவர்களுக்கும் அறிமுகம் தேவையில்லை! அழகுத் தமிழ்… அதுவும் பிழையில்லாத் தமிழ்… இவரது நோக்கம்! கலப்பில்லாத் தமிழ் இவரது கனவு! இவரது எண்ணங்களை நூல்களின் வழியே தமிழ் மொழியை மையப்படுத்தி மிக மிக அற்புதமாகத் தன்னுடைய நூல்களைத் தொகுத்து இருக்கிறார். எப்போது கட்டுரைகள் எழுதினாலும் ...

யாரென்று தெரியாத வாசகர்கள், நமது புத்தகங்களை வாங்கிச் செல்லும் போது உண்டாகும் பேரானந்தத்திற்கு அளவே இல்லை! அப்பேரானந்தத்தை இம்முறை நேரடியாக புத்தகத் திருவிழாவின் காக்கைக் கூடு அரங்கத்தில் அதிகளவில் அனுபவிக்க முடிந்தது. நான் எழுதிய நூல்களைத் தேடி வரும் வாசகர்களுக்கு அறிமுகம் இல்லதவனாய் அரங்கத்தில் அமர்ந்திருந்தது வித்தியாசமானதொரு உணர்வு! தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத்தை வழங்குவது வாசகர்களே! புத்தகங்களைப் படித்து முடித்த பிறகு அலைபேசியிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு அவர்கள் சொல்லும் கருத்துகள் சோர்வைப் போக்கி, தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத் தொகுப்புகளைப் பரிசளிக்கும்! நேரடி வாசகர்கள் ...

அநீதிக் கதைகள்: (ஆசிரியர் – அருண்.மோ) சமீபத்தில் வெளியான ஆந்தாலஜி ரக திரைப்படமான ‘பாவக் கதைகள்’ ஏற்படுத்திய தாக்கம் வித்தியாசமானது. கதைகளின் உள்ளீட்டிலிருந்து வெளிவர சில நாட்கள் ஆகின! திரு.அருண்.மோ அவர்கள் படைத்திருக்கும் ’திரட்டு’ ரக கதைகளான ‘ஆநீதிக் கதைகள்’ அதே உணர்வைத் தான் கொடுத்திருக்கின்றன! மனதைப் பிழியும் கதைகள்!… சாலையில் செல்லும் போது நாய்கள் எதையாவது மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தால், ‘தீட்டு’ கதை மனதில் எட்டிப் பார்க்கிறது. உளவியல் சார்ந்த பூச்சி கதையில் மன ரீதியான விஷயங்கள் ஆழ்மனதை அழுத்துகின்றன. உளச்சிதைவு கதைக்களத்தை நிச்சயம் ...

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பாரம்பரிய விதைகள் மற்றும் உணவுத் திருவிழா இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்ட இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கிறது. பாரம்பரிய அரசி ரகங்கள், சிறுதானிய உணவுகள், விதைகள், நஞ்சில்லா கீரை, காய்கள், பாரம்பரிய உணவுக் கண்காட்சி, விவசாய இடுபொருள் பயிற்சி, மூலிகை மற்றும் புத்தகக் கண்காட்சி என விழாக்கோலத்தில் குதூகலிக்கப் போகிறது திருப்பத்தூர்! மாலை மூன்று மணி அளவில் புகழ்பெற்ற சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக ...

இயற்கை விவசாயி – 1 (திரு.பெருமாள்) தனது மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட, பெங்களூருவில் செய்துகொண்டிருந்த கட்டுமானப் பணியை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி இருக்கிறார் இயற்கை விவசாயி திரு.பெருமாள் அவர்கள். ‘அந்த காலத்துல எங்க சார் வயசக் குறிச்சு வச்சோம்…’ என்றவர் ‘சுமார் ஐம்பது… ஐம்பத்து இரண்டு இருக்கும்… நீங்களே வச்சுக்கோங்க…’ என தனது வயதை அனுமானத்துடன் குறித்துக் கொடுத்தார். திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் கிராமத்தில் இருக்கிறார் இந்த இயற்கை விவசாயி! பாலாக் கீரை, தண்டுக் கீரை, சிறுகீரை போன்றவை தரையில் ...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு.அருண்.மோ: எழுத்தாளர் நீலகண்டன் சார் மூலமாகத் தான் எனக்கு அறிமுகம் இவர். அவர் இவருக்குக் கொடுத்த அறிமுகம் ’நேர்மையான இளைஞர்’ என்பதே! பழகிய பிறகு தெரிந்தது, நீலகண்டன் சாரின் வார்த்தைகளில் தான் எத்தனை உண்மை என! ‘Passion’ சார்ந்து பல்வேறு துறைகளில் இயங்குபவர்களை பார்த்திருப்போம். இவரோ திரைத்துறை மீது வைத்திருக்கும் அந்த Passion அளப்பறியது! அவரின் தீராக் காதலுக்குத் தீனி போடும் வகையில், தான் உருவாக்கிய ‘தமிழ் ஸ்டுடியோ’ அமைப்பு துணை நிற்கிறது. அதில் படிக்கும் படிமை மாணவர்களும், திரைத்துறை ...

கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது. குறுந்தொகையில்… “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து ...

இருபத்திநான்கு மணிநேரமும் சித்த மருத்துவத்தையே ஆக்சிஜனாக உள்ளிழுத்து, சித்த மருத்துத்தையே கரியமிலவாயுவாக வெளியிடும் அறிய வகை தாவர ஜீவன் இவர். ’மிகச் சிறந்த எழுத்தாளர், வசீகரிக்கும் பேச்சாளர்…’ இந்த அறிமுகத்தைத் தாண்டி அவர் சார்ந்து நிறைய பேச வேண்டியிருக்கிறது! தனது எழுத்துகளின் மூலமே நோயாளரின் பாதி நோயை குணமாக்கி, பிறகு மருத்துவம் பார்க்கும் போது தனது கனிவான பேச்சாலும் சித்த மருந்துகளாலும் மிச்சமீதமிருக்கும் குறிகுணங்களை விரட்டும் சக்தி இவருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. உறங்கும் போது கனவில் கூட, தேவதைகளுக்குப் பதிலாக சித்தர்கள் வெண்சிறகு வைத்து ...