பழங்களில் செயற்கை இரசாயன தாக்குதல்… ‘நாளை நமதே’ திரைப்பட பாடலில் வரும் ‘காலங்கள் எனும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென வளர்ந்து…’ எனும் வரி, ஒரு பழம் உருவாகக் கூடிய விதத்தைச் சுவைபட வர்ணிக்கிறது. ஒரு காய் இயற்கையாக தனது சுய திறனால் நிதானமாகப் பழமாகக் கனியும் அதிசயத்தை மடைமாற்றி, இரசாயனங்களைப் பயன்படுத்தி மிக மிக விரைவாக கனியச் செய்யும் இரசாயன தாக்குதல் இயற்கையின் நியதிக்கு எதிரானது. பேராசை கொண்ட மனிதர்களின் வன்மத் தாக்குதல் அல்லவா இது! சக மனிதர்களின் மீது கரிசனம் ...

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகக் கிரிக்கெட் பார்க்கிறேன் நான்! 1995 ஆம் ஆண்டு தொற்றிக்கொண்ட பழக்கம் அது! ஐந்தாம் வகுப்பிலிருந்தே பேட் மற்றும் பந்து மீது தீராத காதல்! அந்தக் காதலை நிறைவேற்றும் விதமாக அற்புதமான கிரிக்கெட் நண்பர்கள் எனக்கு அமைந்தார்கள்! அதில் எல்லோருமே எனக்கு சீனியர்கள்! சிறுவனான எனக்கு அவர்கள் கொடுத்த ஊக்கமும் அன்பும் உற்சாகமும், ‘Under 13‘ பிரிவில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்குத் தேர்வு செய்யும் அளவுக்கு எடுத்துச் சென்றது. கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பில் ஒரு விக்கெட் மட்டும் எடுத்து ...

His name Is john… சில பாடல்களை முதன்முறை கேட்கும் போதே உள்ளுக்குள் ஒருவிதமான சிலிர்ப்பை ஏற்படுத்தும்! கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே வெளியாகியிருந்தாலும், எதேச்சையாக அமேசான் மியூசிக் தளத்தில் ‘His name Is john’ பாடலைக் கேட்க முடிந்தது! பெயரைக் கேட்டதும் ஏதோ ஆங்கில ஆல்பமோ என்று நினைத்துவிட வேண்டாம்! நம்ம தமிழ்த் திரைப்பட பாடல் தான்! 1986ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் இன்ட்ரோ பாடல் போலத் தொடங்கி, புதுமையான இசைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது பாடல்! இசை அமைப்பும், குரல் ...

சாதனையாளர் ’Village database’ ரகு: பயணப் பிரியர்களுக்கு ’Village database’ எனும் யூ-டியூப் சேனல் குறித்து தெரியாமல் இருக்காது. ’வணக்கம்ம்ம் நண்பர்களே…’ என்று அவர் தொடங்கும் காணொளிகள், பார்வையாளர்களுக்கு நேரடியாக சுற்றுலா சென்று வந்த உணர்வை ஏற்படுத்தும். நிறைய மனிதர்களைப் பயணப் பிரியர்களாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு! வார இறுதி நாட்களில் வீட்டில் ஹாயாக ஓய்வெடுக்கலாம் எனும் பலரது எண்ணத்தை மாற்றி வாய்ப்பு இருக்கும் போது, Village database சேனலில் பார்த்த சுற்றுலா தளத்துக்குப் போகலாமா எனும் எண்ணத்தைப் பெருவாரியான மக்களுக்கு விதைத்தவர் ...

மலைப் பகுதிகளுக்குச் சுற்றுலா பயணமாகச் சென்றாலும் சரி, மருத்துவப் பயணமாகச் சென்றாலும் சரி, மலைகள் புத்துணர்வூட்டும் புதிய அனுபவங்களை நமக்காக கொடுத்துக்கொண்டே இருக்கும். அவ்வகையில் ஏலகிரி மலைவாழ் மக்களுக்கான நடமாடும் சித்த மருத்துவப் பிரிவு சார்பாக நடைபெற்ற முகாமில் உற்சாகமூட்டும் அனுபவம் கிடைத்தது. நேபாளத்து முடியவர்: அவரைப் பார்க்கும் போதே நேபாளத்தைச் சார்ந்தவர் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. அவர் அருகில் வரும் போதே ‘தமிழ்…’ என்று நான் இழுக்க… ‘நல்லா தமிழ் தெரியும் சார்… எனக்கான பிரச்சனைய நானே சொல்றேன்…’ என அழகுத் தமிழில் ...

யாருடைய காதலுக்கு இந்த வசனம் பொருந்துகிறதோ இல்லையோ… இந்த ஆந்தைக் காதலர்களுக்குப் பொருந்தும்! ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது… புனிதமானது…’ உண்மையில் இரவாடிகளின் காதல் புனிதமானது தான்! மஞ்சுமல் பாய்ஸின் சுரம் அடித்துக் கொண்டிருக்கும் சூழலில், கிட்டத்தட்ட பதினொரு வருடங்களுக்குப் பிறகுப் பழைய கல்லூரி நண்பர்களுடன், மஞ்சுமல் பாய்ஸ் உற்சாகத்தில் நற்பயணமாக வேடந்தாங்கலில் குதூகலித்துக் கொண்டிருந்தோம்! கரையோரம் இருந்த மரக் கிளையில் லேசான அசைவுத் தோன்ற சட்டெனத் தலையைத் திருப்பினேன்! புள்ளி ஆந்தைகள் இரண்டு! ‘இரண்டும் ஒன்றோடு ...

புதுமனைப் புகு விழாவிற்கு அன்போடு அழைக்கிறோம்! அறுபத்து ஆறு வயதில் தந்தைக்கு முதல் காதல் துளிர்விட இருக்கிறது! அறுபத்து மூன்று வயதில் தாய்க்கு முதல் காதல் மகிழ்ச்சியூட்ட இருக்கிறது… எனக்கோ முப்பத்து ஏழு வயதில் முதற்காதல் மொட்டவிழப் போகிறது… ஆம், இவ்வயதுகளில் முதன் முறையாகச் செங்கற்கள் மீது காதல் கொண்டு சொந்த வீட்டில் குடியேற இருக்கிறோம்! பெற்றோரும், மனைவியும், நானும், இரண்டு குட்டித் தேவதைகளும் பல கனவுகளைச் சுமந்துகொண்டு உற்சாகத்தோடு நுழையக் காத்திருக்கிறோம். முப்பத்து ஏழு ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே குடியிருந்திருந்தாலும், சொந்த வீட்டில் ...

இதுவரை நான் வாழ்ந்த அனைத்து வாடகை வீடுகளுக்கும் கடந்த வாரம் சென்றுவிட்டு தான் வந்தேன்! அதற்கான காரணமும் இருக்கிறது. பிறந்த சில மாதங்களிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை வாழ்ந்த சேலம் அரிசிப்பாளையம் பகுதி வாடகை வீடு என்றுமே ஸ்பெஷல்! புகைப்படத்தில் இருக்கும் பகுதியில் தான் எனது பெரும்பாலான குழந்தைப் பருவம் கழிந்தது! 90’ஸ் கிட்ஸ்: 90’ஸ் கிட்ஸ்களின் ஸ்பெஷலான ஐஸ் வண்டிகள்… சிறுவர் குழு விளையாட்டுகள்… நிலாச் சோறு… மாடியின் அடைப்பை அடைத்து மழை நீரைத் தேங்கவிட்டு நீரில் விளையாடுவது… தெருமுனையில் வெண் திரையில் ...

நீண்ட நாட்களாகக் கால்நடை மருத்துவர் பழனி அவர்களின் கானகத்தைக் காண திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். காக்கைக் கூடு செழியன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்று வரலாமா என்று கேட்க, சனிக்கிழமை மாலை அங்குச் செல்லும் திட்டம் உறுதியானது. பணிச்சூழல் காரணமாகத் தன்னால் வர இயலாத சூழலைத் தெரிவித்தார் மரு.பழனி அவர்கள்! நான் அங்கு இல்லை என்றாலும், நான் கொடுக்கும் வரவேற்பை விட சிறப்பான வரவேற்பை உங்களுக்கு அங்கு வழங்குவார்கள் என்றார் அவர்! மாலை நான்கரை மணிக்கு அவரது பகுதிக்குள் நுழைந்தோம்! யார் நம்மை ...

பழமை மிக்க பாபநாசம் அருவிக்குச் செல்லும் வழித்தடம் அது. மக்கள் கூட்டத்திடம் உணவுக்காகக் கையேந்தும் நிலையில் நிறைய சாம்பல் மந்திகள் (Gray Languar) தென்பட்டன! அழகான கருத்த முகம்… சாம்பல் நிற உடல்… அதீத சுறுசுறுப்பு… என அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன அவை. அவ்வப்போது சாதாரண குரங்குகளிடம் வாழிட மற்றும் உணவியல் போராட்டத்திற்காக அவை அரங்கேற்றிக் கொண்டிருந்த அழகிய நாடகத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்! அங்கு நிறுத்தப்பட்டிருந்த சிற்றுந்துகள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தான் அவற்றின் நாடக மேடை! அங்கும் இங்கும் பாய்ந்து ...