யாருடைய காதலுக்கு இந்த வசனம் பொருந்துகிறதோ இல்லையோ… இந்த ஆந்தைக் காதலர்களுக்குப் பொருந்தும்! ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது… புனிதமானது…’ உண்மையில் இரவாடிகளின் காதல் புனிதமானது தான்!
மஞ்சுமல் பாய்ஸின் சுரம் அடித்துக் கொண்டிருக்கும் சூழலில், கிட்டத்தட்ட பதினொரு வருடங்களுக்குப் பிறகுப் பழைய கல்லூரி நண்பர்களுடன், மஞ்சுமல் பாய்ஸ் உற்சாகத்தில் நற்பயணமாக வேடந்தாங்கலில் குதூகலித்துக் கொண்டிருந்தோம்!
கரையோரம் இருந்த மரக் கிளையில் லேசான அசைவுத் தோன்ற சட்டெனத் தலையைத் திருப்பினேன்! புள்ளி ஆந்தைகள் இரண்டு! ‘இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது…’ எனும் ரஜினி பாடல் நினைவில் வந்து சென்றது!
குணா:
இரு ஆந்தைகள் யாருடைய சிந்தையுமின்றி காதல் வயப்பட்டிருந்தன! இளையராஜா இசையில் கமலின் குரலில் ‘கண்மணி அன்போடு காதலன்…’ பாடல் எனது மண்டைக்குள் எதிரிலிக்க… அடடா… என்ன ஒரு ஆந்தைக் காதல் அது! அந்தப் பாடலை எனது மனதின் பின்னணியில் பாட விட்டுக்கொண்டே ஆந்தைகளின் காதலை ரசிக்க எவ்வளவு பேரானந்தம் தெரியுமா! கமலையும் இளையராஜாவையும் அழைத்து வந்து ஆந்தைகளின் காதலைக் காட்டி ஒரு காதல் பாடலை உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று அப்போது தோன்றத் தான் செய்தது!
ஒரு ஆந்தை தனது அலகை வைத்து மற்றொரு ஆந்தையின் தலைக் கோதிவிட்ட போது, ‘வேறெதும் தேவையில்லை நீ மட்டும் போதும்…’ எனும் ஜிப்ரானின் இசை எனக்குள் எதிரொலித்தது! ஒரு கண்ணை மூடி மறுகண் திறந்து வெட்கப் பார்வைப் பார்த்துக் கொண்ட போது, ‘கண்கள் இரண்டால்… உன் கண்கள் இரண்டால்…’ என ஜேம்ஸ் வசந்தன் இலேசாக எட்டிப் பார்த்தார்!
மணிரத்னம் பார்வையில்:
கால் மணி நேரம் மரக்கிளைகளுக்குள் ஒளிந்திருந்த ஆந்தைகளைப் படம்பிடிக்க, மெளனராகம் சின்ன சின்ன வண்ணக் குயில் பாடலில் ‘காலம் தோறும் கேட்க வேண்டும்… ம்ம்ம். ம்ம்ம்…’ எனும் வரி வரும் போது, கேமிராவை மாட்டு வண்டிக்குள் புகுத்தி ரேவதியைப் படம் பிடிக்கும் மணிரத்னத்தின் யுத்தியைக் கடைப்பிடித்து ஆந்தைகளின் காதலைப் படம் பிடித்தேன் நான்! இலைகளுக்கு நடுவில் ரேவதிக்குப் பதிலாக ஆந்தைகள்!… ஆந்தைகளும் பேரழகு தான்!…
- வி.விக்ரம்குமார்.,MD(S)
வெகு நாட்களுக்கு பின்பு எந்திர வாழ்க்கையின் இடையூறு இல்லாமல் குழந்தை தனத்தோடும் இயற்கையின் காதலர்களாய் வேடந்தாங்கலின் பறவைகளாய் குரங்குகளின் கூட்டாளியாய் வழிகாட்டியின் அடக்கமுள்ள பொதுமக்களாய் சில மணி நேர செலவழிப்பில் குதூகலத்தின் கூட்டாளியாக பங்கு கொண்டதில் எல்லையற்ற மகிழ்ச்சியே…..
மீண்டும் பத்து வருடங்களுக்கு பின்னோக்கி சென்ற உணர்வு இரு தினங்களில்… உங்களோடு செலவழித்த நேரம் மதிப்பு மிக்கது
ஒரு புகைப்படத்திற்கு இவ்வளவு பெரிய கட்டுரையை கவிதை வடிவில் வடிக்க தனி திறமை வேண்டும்…..தம்பி
நன்றி அண்ணா