திருப்பத்தூரில் பாரம்பரிய விதைகள் மற்றும் உணவுத் திருவிழா – பிப்ரவரி – 4

-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பாரம்பரிய விதைகள் மற்றும் உணவுத் திருவிழா இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்ட இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கிறது.

பாரம்பரிய அரசி ரகங்கள், சிறுதானிய உணவுகள், விதைகள், நஞ்சில்லா கீரை, காய்கள், பாரம்பரிய உணவுக் கண்காட்சி, விவசாய இடுபொருள் பயிற்சி, மூலிகை மற்றும் புத்தகக் கண்காட்சி என விழாக்கோலத்தில் குதூகலிக்கப் போகிறது திருப்பத்தூர்!

மாலை மூன்று மணி அளவில் புகழ்பெற்ற சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல்லுணவு குறித்து சிறப்பு உரை நிகழ்த்துகிறார்!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.தெ.பாஸ்கரபாண்டியன் அவர்கள் துவக்கி வைக்க, காலையிலிருந்து இயற்கை உணவுகளுக்கான சந்தை நடைபெறுகிறது. திரு.உழுது உண் சுந்தர், முனைவர் திரு.பிரபு, திரு.கோவை பாலா, திரு.ஆற்றல் பிரவீன் குமார், மரு.வி.விக்ரம்குமார், திரு.கு.செந்தமிழ்செல்வன் ஆகியோரின் சிறப்புரைகளும் இருக்கின்றன.

திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு நஞ்சில்லா உணவுகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் தொடக்கம் இது! பல நல்ல உள்ளங்கள் கைக்கோர்த்திருக்கின்றன!… வாருங்கள் நீங்களும் கரம் கோர்க்க!… திருவிழாவில் அரங்குகள் அமைக்கத் தொடர்பு கொள்ளலாம்.

திருப்பத்தூர் பசுமை சந்தையின் துவக்க விழா அறிவிப்பும் காத்திருக்கிறது…

மேலும் தகவல்களுக்கு… திரு.அச்சுதானந்தம் 9786621652, திரு.அன்பழகன் 9952675026, திரு.முத்தமிழ் 9150308097

-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

Subscribe to Our Youtube Channel